வியாழன், 1 டிசம்பர், 2016

· கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், காவல்துறை விடை தர வேண்டும்.

சென்னையிலும், மதுரையிலும் 5 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அல்-கொய்தாவுடன் தொடர்பு என செய்திகள் வெளியிடப்படுகிறது. N.I.A. எனும் தேசிய புலனாய்வு முகமை இந்த கைது நடவடிக்கையை நடத்தியுள்ளது.
சம்பவம் நடந்த அன்றே எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மூலம் விசாரித்ததில் கைது செய்யப்பட்டவர்கள் சந்தேகத்திற்கு இடமளிப்பவர்கள் இல்லை என்றும், இது திட்டமிட்ட நாடகமாக தெரிவதாகவும் தெரிவித்தனர்.
உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினோம்.பல விளக்கங்களைசொன்னாலும் அது ஏற்க்கும் படியாக இல்லை.
நடைபெற்றுள்ள நிகழ்வுகளை பார்க்கும் போது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
· பொது சிவில் சட்ட எதிர்ப்பால் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களும் ஓரணியில் திரண்டு நிற்கிறது.
· 500, 1000 ரூபாய் நோட்டு பிரச்சினையில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்து வரும் சூழல்
· டாக்டர். ஜாகிர் நாயக் மீதான தடை.
இந்த நிகழ்வுகளில் இருந்து மக்களை திசை திருப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்குமோ!
· கைது செய்யப்பட்ட உடனே விசாரணைக்கு முன்பே அல்-கொய்தாவுடன் உள்ள தொடர்பை ஊடகங்களுக்கு சொன்னது யார்?
· உள்துறை அமைச்சர் இந்தியாவில் அல்-கொய்தா இல்லை என சில மாதங்களுக்கு முன் அறிவித்தாரே அது முரணாக உள்ளதே?
· கைது செய்யப்பட்டவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று குண்டு வெடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவு வலிமையானவர்கள் இல்லை என்று அவர்களை பற்றி தெரிவித்தவர்களின் கருத்து
· நாட்டில் மக்கள் கொந்தளிக்கும் நிலை வரும்போதெல்லாம் மக்களை திசை திருப்பத்தான் மத்திய புலனாய்வு துறைகளா?
· அதற்கு முஸ்லிம் இளைஞர்கள்தான் பலிகடாக்களா?
· தமிழகத்தில் அல்-கொய்தா அமைப்பு உள்ளது என்பதை தமிழக காவல்துறை ஒத்துக் கொள்கிறதா?
· தமிழக இளைஞர்களை N.I.A. நேரடியாக கைது செய்கிறது என்றால் தமிழக அரசும் காவல்துறையும் இதற்கு என்ன பதிலை சொல்ல போகிறது.
· ஒரு பக்கம் பஞ்சாபில் சிறையை உடைத்து துப்பாக்கி சூடு நடத்தி கைதிகளை விடுவித்து சென்றவர்களை அமைதியாக கைது செய்யப்படுகிறார்கள்.
· போபாலில் முஸ்லிம் கைதிகளை காவல்துறையே தப்பவைத்து பின்பு நிராயுதபாணிகளான அவர்களை சுட்டு கொன்றார்கள்.
· கேட்பதற்கு நாதியில்லை என்ற எண்ணமா?
· முஸ்லிம்களுக்கு எதிரான வன்ம நடவடிக்கைகள் தொடர்கிறது?
· மக்களை அணி திரட்டியும், சட்ட ரீதியாகவும் நாம் போராட வேண்டிய தேவை அதிகமாகி கொண்டே இருக்கிறது.
· கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், காவல்துறை விடை தர வேண்டும்.
· இல்லையேல் அரசின் மீதும் காவல்துறையின் மீதுமுள்ள நம்பிக்கை குறைய அது காரணமாகிவிடும் என எச்சரிக்கிறேன்.
K.K.S.M தெஹ்லான் பாகவி
மாநில தலைவர்
SDPI கட்சி