செவ்வாய், 20 டிசம்பர், 2016

தேர்தல் வரலாற்றில் கருணாநிதி மட்டுமே இதுவரை தோற்காத எம். எல் .ஏ.!


 
கருணாநிதி மட்டுமே! இதுவரை தோற்காத எம். எல் .ஏ.!
தி.மு.க.தலைவர் கருணாநிதியின் அரசியல் பங்கை இந்த நாடு அறியும். 90 வயதை கடந்த அரசியல் தலைவர்களில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.
விசேஷமானவர் என்றுகூட சொல்லலாம். எப்படி என்று பார்த்தால் அவர் முதன் முதலில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டது குளித்தலையில் அந்த பட்டியலை இங்கே வாசகர்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டிருக்கிறது.
அப்போ துவங்கிய அந்த வெற்றி இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்வரை தொடர்ந்துள்ளது.
ஆம் தொடர்ந்து 13 முறை கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒருமுறைகூட தோல்வியை தழுவியது கிடையாது.1980 ஆம் ஆண்டு தேர்தலின் போது அண்ணா நகரில் அ.தி.மு.க.வேட்பாளார் ஹெச்.வி.ஹண்டேவை எதிர்த்து போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகள் வந்த போது கருணாநிதி வெறும் 699 வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த முடிவை ஹெச்.வி.ஹண்டே ஏற்காமல் ரீ கவுண்டிங் கேட்டார்.
எம்.ஜி.ஆர் தலையிட்டு அதெல்லாம் வேண்டாம் கருணாநிதி வெற்றி பெற்றதாக செய்யப்படும் அறிவிப்பை தடுக்காதே என்று சொன்னதாக அப்போது பரபரப்பாக பேசியதுண்டு.
அதேபோல 1991 ஆம் ஆண்டு தேர்தல் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அனுதாப அலை துறை முகம் தொகுதியில் அ.தி.மு.க.வின் போர் வாள் க.சுப்புவை எதிர்த்துபோட்டியிட்டார். என்ன ஆச்சர்யம் பாருங்க அந்த தேர்தலில் கூட 890 சொற்ப வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். தி.மு.க.ஆட்சியை பிடிக்கிறதோ இல்லையோ கருணாநிதி தொடர்ந்து இன்று வரை சட்டமன்ற உறுப்பினர்தான்.
7 முறை காங்கிரஸையும், 4 முறை அ.தி.மு.க. மற்றும் தலா ஒருமுறை முஸ்லிம் லீக்,சுயேட்சை ஆகியோரை வென்றிருக்கிறார். 1957 குளித்தலை ,1962 தஞ்சாவூர்,1967சைதாப்பேட்டை, 1971சைதாப்பேட்டை, 1977அண்ணா நகர்,1980 அண்ணா நகர், 1989 துறைமுகம், 1991 துறைமுகம், 1996 சேப்பாக்கம்,2001 சேப்பாக்கம்,2006 சேப்பாக்கம்,2011 திருவாரூர், 2016 திருவாரூர். இந்த பட்டியல் நீள வேண்டும் என்பது தி.மு.க.வினரின் அவா.

Related Posts: