இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கோவையில் கொல்லபட்டிருக்கிறார் கொலைக்கான காரணமோ,குற்றவாளி யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் திருப்பூரில் இந்துமுன்னணியை சார்ந்தவர்கள் கடைகள் மீது கல்வீசியும்,பேருந்துகளை உடைத்தும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திவருகிறார்கள்.
கோவையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்.பேருந்துகள் கண்ணாடி உடைப்பது போன்ற நடவடிக்கைகளில் கோவை பாஜக ,இந்து முன்னணி கும்பல் அட்டூழியம் செய்துவருவதாகவும் தகவல்கள் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
அமைதியான முறையில் இயங்கிக்கொண்டிருக்கும் தொழில் நகரான திருப்பூரை இந்த கும்பல் தங்கள் சுயநலத்திற்காக அழிக்காமல் விடமாட்டார்கள் போல் இருக்கிறது.
தமிழக மக்கள், குறிப்பாக திருப்பூர் கோவை மக்கள் இவர்களை முற்றிலும் புறக்கணித்து, தனிமைப்படுத்த வேண்டும்.
காவல்துறைக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை...