ஞாயிறு, 25 டிசம்பர், 2016

மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறக்கோரியும், ஊக்கப்படுத்தியும் மத்திய அரசு பல அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது.

மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறக்கோரியும், ஊக்கப்படுத்தியும் மத்திய அரசு பல அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது.
அதேசமயம், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு கட்டுப்பட்ட  பெட்ரோல் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு(பி.இ.எஸ்.ஓ.) டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் போடுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, பெட்ரோல், டீசல் போடும் பம்ப் அருகே டெபிட், கிரெடிட் கார்டுகளை  பயன்படுத்தி பணம் செலுத்தும் போது, பெரிய தீவிபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், பணம் செலுத்துவதற்கும், டிஜிட்டல் பேமெண்ட் செலுத்த பிரத்யேக பகுதியில் மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கு, பெட்ரோல் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு(பி.இ.எஸ்.ஓ.) கடந்த 19-ந்தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியருப்பதாவது-
பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசலை வாகனங்களுக்கு நிரப்பிய பின், ஸ்வைப்பிங் மெஷின் மூலம் கார்டுகள், இ-வாலட்களில்பணம் செலுத்தும் போது வாடிக்கையாளர்களுக்கும், பெட்ரோலிய நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பெட்ரோல் நிலையங்களில் அபாயகரமான பகுதி(பகுதி-1) என பெட்ரோல் பம்ப்களைச் சுற்றி நேர்முகமாக 1.2 மீட்டர் பகுதியும், அனைத்து திசைகளிலும் படுக்கை வசமாக 45 செ.மீ பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.  பெட்ரோல், டீசல் போட்டுவிட்டு,இந்த பகுதிகளில் ஸ்வைப்பிங்மெஷினில் டெபிட், கிரெடிட், மொபைல்-இவாலட் மூலம் பணம் செலுத்துவது மிகவும் அபாயகரமானது. கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது, அதில் இருந்து வெளிவரும் கதிர்களால் பெரும் தீவிபத்துகளையும், சேதங்களையும் ஏற்படுத்தக்கூடும்.
ஆதலால், பெட்ரோல்,டீசல் சில்லறை விற்பனை நிலையங்களில் குறிப்பிட்ட அந்த அபாயகரமான பகுதியில் டிஜிட்டல் பேமெண்ட் ஏதையும்மேற்கொள்வதைக் தவிர்க்க வேண்டும். பெட்ரோல் நிலையத்தில் டிஜிட்டல் பேமெண்ட் செலுத்துவதற்கென பிரத்யேக இடத்தை உருவாக்க வேண்டும்.  இது குறித்து அனைவருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக மத்திய அமைச்சரவைச் செயலாளர் பிரதீப் குமார் சின்ஹாவிடமும், தேசிய பேரழிவு மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் துணைத்தலைவர் எம். சசிதர் ரெட்டி நேரில் சந்தித்து விளக்கியுள்ளார்.“ இப்போதுள்ள சூழலில் டிஜிட்டல் பேமெண்ட் முறை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு, பொதுமக்களின் பாதுக்காப்பும், பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் பேமெண்ட் முறையை செயல்படுத்துவதும் அவசியம்''.
  இது குறித்து அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.