ஞாயிறு, 25 டிசம்பர், 2016

கோட்டையில் கோலோச்சிய அதிகாரி, முதல்வராக இருந்த ஜெ.,அம்மாவைத்தவிர யாரையும் மதிக்காதவர்.

கோட்டையில் கோலோச்சிய அதிகாரி, முதல்வராக இருந்த ஜெ.,அம்மாவைத்தவிர யாரையும் மதிக்காதவர்.
அமைச்சர்களைக் கூட ஒருமையில் அழைத்த திமிர். பன்னீர் இடைக்கால முதல்வராக இருந்த போதிலும் மரியாதை நிமித்தமாகக் கூட அவரிடம் ஆலோசனைகள் கேட்காத ஆணவம்.
ஜெ.,அம்மா பெயரைச்சொல்லி ஆடிய ஆட்டம். கோடி கோடியாக பணம். ஆடம்பர வாழ்க்கை என தூள் கிளப்பிய ஒரு அதிகாரி விசாரணைக்கு பயந்து ஆஸ்பத்திரியில் போய் பதுங்கிக் கொண்ட பரிதாபம்.இந்தியாவே சிரிக்கிறது.
தலைமைச்செயலகம் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தியது தமிழகத்தின் அவமானம் என்கிறார்கள் தலைவர்கள் மற்றும் பொது மக்கள்.
சரி விடுங்கள்.அந்த அதிகாரியின் குடும்ப வாழ்க்கை பற்றி சமூகவலைத்தளங்களில் கசியும் விஷயங்கள் பயங்கர அதிர்ச்சி ரகம்.
கடந்த இரண்டு வருடங்களாக ராம மோகனராவ் வீட்டில் சமைக்கும் பழக்கமே இல்லையாம். விமான நிலையம் அருகே உள்ள ஒரு செவன் ஸ்டார் ஹோட்டலில் இருந்து தான் மூன்று வேளைக்கும் உணவு வரும்.
அதிலும் மோகனராவின் மகன் மாதத்தில் பாதி நாட்கள் அந்த மாதிரி ஹோட்டல்களில் தான் தங்குவாராம்.
நண்பர்கள், கூத்து, கும்மாளம் என பையன் வாழ்ந்திருக்கிறார். எவன் அப்பன் வீட்டு காசு என்பது தெரியவில்லை.
அதே போல குளிப்பதற்கு அவர்கள் வீட்டில் மினரல் வாட்டர் தான் பயன் படுத்துவார்கள். ஒரு கேனின் விலை ஆயிரத்து இரு நூறு ரூபாயாம்.
அடங்கொய்யால என்கிறார்கள் முக நூல் போராளிகள். என்னமோ போங்கப்பா..காதுல புகை வருது..!
Source FB Sendhil Kumar Dsk