திங்கள், 19 டிசம்பர், 2016

​உதகை தாவரவியல் பூங்காவில் குளிர்காலத்தை வரவேற்கும் சீன மலர்கள்

உதகை தாவரவியல் பூங்காவில் குளிர்காலத்தை வரவேற்கும் வகையில் பூத்து குலுங்கும் சீனா நாட்டு பவுளுனியா மலர்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கபட்ட உதகை தாவரவியல் பூங்காவில் பல்வேறு நாடுகளின் மரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள மரங்கள் கோடை காலம், குளிர்காலம், மழை காலம் என அந்தந்த காலத்திற்கு ஏற்ப பூக்கும் தன்மை கொண்டுள்ளன. 

இந்த நிலையில் தற்போது குளிர் காலம் தொடங்கி உள்ளதால் அதனை வரவேற்கும் விதமாக சீனா நாட்டை சார்ந்த பவுளுனிய மரங்களில், மலர்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. 

வெளிர் ஊதா நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மலர்கள், குடுவை வடிவில் காணப்படும். இவ்வகை மலர்கள் பூக்க தொடங்கியதும், மரத்தில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து பவுளுனிய மலர்களாக காட்சியளிப்பதை சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைபடம் எடுத்து செல்கின்றனர். 

Related Posts: