திங்கள், 19 டிசம்பர், 2016

இந்துக்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று அம்மாநில பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

உத்தரகாண்ட்டில் இஸ்லாமிய அரசுப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்காக சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுபோல், இந்துக்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று அம்மாநில பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாமிய அரசுப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்துவதற்காக மதியம் 12 மணியில் இருந்து ஒன்றரை மணி நேரம் மசூதிக்குச் சென்று வர அனுமதி அளிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. 

இதற்கான ஒப்புதலை அம்மாநில அமைச்சரவை நேற்று முன்தினம் அளித்தது. இது குறித்து விளக்கம் அளித்த அம்மாநில முதலமைச்சர் ஹரிஷ் ராவத், வெள்ளிக்கிழமைத் தொழுகைகளை பதட்டம் இன்றி மேற்கொள்ளவே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

காங்கிரஸ் அரசின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ள அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் நலின் கோலி, இது சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என தெரிவித்துள்ளார். 

மேலும், அரசுப் பணியில் உள்ள இந்துக்கள் சிவ பூஜை செய்வதற்காக திங்கள் கிழமைதோறும் 2 மணி நேரம் வழங்க வேண்டும் என்றும், ஆஞ்சநேயருக்கு பூஜை செய்ய செவ்வாய் கிழமை தோறும் 2 மணி நேரம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக்கு எதிராக அம்மாநில பாஜக கட்சியின் எதிர்ப்பு உத்தரகாண்ட் அரசியலில் பெரும் பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts: