ஞாயிறு, 25 டிசம்பர், 2016

இஸ்ரேலுக்கு அணுஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்

Pak minister

பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேலுக்கு அணுஆயுத எச்சரிக்கை விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அரசு, தனது ராணுவத்தை சிரியாவுக்கு அனுப்பினால், அந்த நாட்டை அணு ஆயுதம் மூலம் அழித்து விடுவோம் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் மோஷே யாலென் எச்சரிக்கை விடுத்ததாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தி பொய்யானது என்பது தெரியவந்தது. மேலும், மோஷே யாலென் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சராவார். தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக அவிக்டோர் லிபெர்மேன். இந்தநிலையில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், பாகிஸ்தானும் அணுஆயுத நாடு என்பதை இஸ்ரேல் மறந்துவிட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த தகவல் பொய்யானது என்று இஸ்ரேல் தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/world/8/73087/fake-news-report-leads-pakistan-minister-to-issue-nuke-threat-against-israe