வியாழன், 19 ஜனவரி, 2017

பெட்ரோல் விலை 1.5 மாதத்தில் 4வது முறையாக உயர்ந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் மூன்று காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

பன்னாட்டுச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் 15நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைத் தீர்மானிக்கின்றன. 

இந்நிலையில் நள்ளிரவில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் மூன்று காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை,  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. கடந்த ஆறு வாரங்களுக்குள் பெட்ரோல் விலை நான்கு முறையும், ஒரு மாதத்துக்குள் டீசல் விலை மூன்று முறையும் 
உயர்த்தப்பட்டுள்ளன.

http://ns7.tv/ta/tamil-news/business/16/1/2017/petrol-price-4th-time-hike-last-one-month

Related Posts: