வியாழன், 19 ஜனவரி, 2017

பிளஸ் 2 தேர்வுக்குத் தயாராவது எப்படி?

ளஸ் 2 தேர்வுக்குத் தயாராவது எப்படி?
-பொன். தனசேகரன்

பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் பிளஸ் டூ தேர்வு முக்கியமானது. இந்தத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களைப் பொருத்துதான் எதிர்காலத்தில் படிக்க வேண்டிய பாடங்களையும் சேரவேண்டிய கல்வி நிலையங்களையும் தேர்வு செய்யமுடியும். இந்தத் தேர்வுக்கு நன்கு தயாராவதன் மூலம் நுழைவுத்தேர்வுகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

தேர்வு நேரம் நெருங்க, நெருங்க மாணவர்களிடம் பதற்றம் தொற்றிக்கொள்ளும். பாடங்களை நன்றாகப் படித்திருந்தாலேயே மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

தேர்வு நெருங்கும் நேரத்தில் டியூஷனுக்குப் போய் படித்தாலும்கூட,  வீட்டிற்கு வந்தும் பாடங்களைப் படிக்க வேண்டும். அதற்காக, எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவழித்து உங்களது படிப்பு கவனத்தை சிதறடிக்க வேண்டாம். 

வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தாலும், அவர்களுடன் அரட்டை அடித்து பொழுதைக் கழிக்காமல், தனி அறையில் அமர்ந்து படிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களுடன் தேவையில்லாமல் வீண் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அமைதியான சூழ்நிலையில் மனதை ஒருநிலைப்படுத்தி பாடத்தைப் படிக்க வேண்டும். 

சூத்திரங்கள், சமன்பாடுகள், கோட்பாடுகள் போன்றவற்றை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் படித்து நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. எனவே, அவை மறந்து போகாது. மனப்பாடப் பாடல்களை மனனம் செய்தால் மட்டும் போதாது. அதனை எழுதிப் பார்க்க வேண்டும். அப்போதுதான், தேர்வில் தடுமாற்றம் இல்லாமல், எழுத்துப் பிழை இல்லாமல் எழுத முடியும். 

source: new gen media 

Related Posts: