ஞாயிறு, 15 ஜனவரி, 2017

டெல்லியின் கொம்பைப் பிடி : தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு !

டெல்லியின் கொம்பைப் பிடி : தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு !
“கரசேவை செய்யப்போகிறோம்” என்று சொல்லி உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கிக் கொண்டு, கடப்பாரை சேவை செய்து, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்கள்தான் பாரதிய ஜனதாக் கட்சியினர். 
மசூதியை இடித்து மதவெறியைத் தூண்டி ஆட்சியையும் பிடித்து விட்டார்கள். ஆனால் மசூதியை இடித்த குற்றத்துக்கு இவர்களை இதுவரை நீதிமன்றம் தண்டிக்கவில்லை.
எல்லா விசயங்களிலும் இரட்டை வேடம் போடும் பாரதிய ஜனதா, வழக்கம் போல இந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடுகிறது. 
“விஜில்” என்ற ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பினைச் சேர்ந்த ராதா ராஜன் என்பவர்தான் ஜல்லிக்கட்டுத் தடைக்கு குரல் கொடுப்பவர். 
மாடுகளின் மீது பெருங்கருணை கொண்டுள்ள இந்த அம்மையார், மாட்டுக்கறி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி அக்லக் என்ற இசுலாமிய முதியவரை கொலை செய்தார்களே, அந்தக் கொலையை நியாயப்படுத்துபவர்.
மதத்தின் பெயரில் மனிதப் படுகொலை நடத்தும் இத்தகைய பார்ப்பன மேட்டுக்குடியினர்தான், விலங்குகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் “பீட்டா” போன்ற அமைப்புகளிலும் நிறைந்திருக்கின்றனர். 
. “விநாயகர் சதுர்த்திக்கு கறிக்கடையை மூடு, கோயில் நகரங்களில் கறிக்கடையே கூடாது, மாட்டுக்கறியை தடை செய்” என்பன போன்ற கோரிக்கைகளுக்கும் ஜல்லிக்கட்டுத் தடைக்கும் அதிக வேறுபாடு இல்லை.
 “மாட்டை அடக்குபவர்கள், மாட்டை வெட்டுபவர்கள், புலால் உணவு புசிப்பவர்கள் போன்றோர் கீழானவர்கள், அவர்களது பண்பாடும் கீழானது” – என்பதுதான் இவர்கள் சொல்ல வரும் கருத்து.
“ஒரு நாடு – ஒரு சட்டம்” என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஆடுகிற ஆட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. 
நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா?
இந்தி, சமஸ்கிருதம், பார்ப்பனியம் ஆகியவற்றை எதிர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் என்று அழைக்கப்படும் உச்சுக்குடுமி மன்றத்தின் நீதிபதிகளுக்கும், உச்சுக்குடுமி கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் தமிழ்நாடு என்றாலே வேப்பங்காயாய்க் கசக்கிறது.
_20170114_203946
“கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று திமிராக கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி.
“திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்று பொங்கல் வாழ்த்து சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்.
நாம் அடக்க வேண்டியது யாரை?  காளையையா, டில்லியையா?
“உன்னுடைய அதிகாரம் தமிழகத்தில் செல்லாது” என்று டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. 
இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.
இவண்.
ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு