மனிதர்களில் யாராவது பலவீனமாக இருந்தால் அவரை ‘கொசு’ என நாம் கிண்டல் செய்வதுண்டு. ஆனால் அப்படிப்பட்ட கொசுக்களிடம் தான் நாம் தினம் தினம் போராடுகிறோம். சிலருக்கு தூக்கமே இல்லாமல் போகிறது.
மனிதர்களின் இரத்தத்தை கொசுக்கள் அதிகமாக விரும்புவதற்கு காரணம் என்னவாக இருக்கலாம் என்று யோசித்த நியூயார்க் ராக்பெல்லர் பல்கலைகழக ஆராய்ச்சி குழு அது சம்மந்தமான ஆய்வில் ஈடுபட்டது. விலங்குகள் வாழக் கூடிய காட்டுப் பகுதியில் அவற்றால் ரத்தத்தைத் தேடி அலைவது கடினமாக இருக்கவே, அவை மனிதர்கள் வாழ கூடிய பகுதிகளை தேர்தெடுக்க ஆரம்பித்து விட்டன. மனிதர்களும் வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பதை போல் கொசுக்களையும் வளர்க்கிறார்கள்.
அதாவது சாக்கடை, குட்டை, குப்பை கூளங்கள் மூலம். மேலும் விலங்குகளைப் போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு கிடையாது. மனிதர்கள் ஒரு குழுவாக வாழ்கிறார்கள் என்பன போன்ற காரணங்களால் அவைகளுக்கு நம்மேல் கொள்ளைப் பிரியம் என கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சில நேரங்களில் கூட்டமாக நிற்கும் போது அதில் ஒரு சிலரை மட்டும் கொசு அதிகமாக கடிக்கும். இதற்கு அவர்களிடமிருந்து வெளிவரும் வாயுக்களின் கலவை காரணமாம். அதனால், சிலர் மேல் மட்டும் அதீத காதல் கொள்கின்றனவாம் கொசுக்கள். மனிதர்களுக்கு நோயின் அச்சுறுத்தலைக் கூட்டுவது பெண் கொசுக்கள் தான் என கூறும் ஆராய்ச்சியாளர்கள் ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை என்கின்றனர்.
பதிவு செய்த நாள் : January 13, 2017 - 07:49 AM