அல்சைமர் எனும் மறதி நோய்க்கான மருந்து பல் சிகிச்சைக்கும் பயன்படும் என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருந்து மூலம் பல் சம்பத்தப்பட்ட பிரச்னைகளை குணமாக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து மூலம் பற்களை புதிதாக முளைக்க செய்ய இயலும் என்றும் பற்களுக்கு இடையே உள்ள துவாரங்களை சரி செய்ய முடியும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பற்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இந்த மருந்து மூலம் சிகிச்சை அளித்தால் ஆறு மாதங்களில் பற்சிதைவு சரியாகி பற்கள் முன்பு இருந்தது போல் மாறிவிடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பதிவு செய்த நாள் : January 10, 2017 - 09:56 PM