ஒருவரது இதயத் துடிப்பைக் கொண்டு உடல் ஆரோக்கியத்தை எளிதில் கணக்கிடலாம். ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 60-100 ஆக இருக்கும். இதற்கு குறைவான அளவில் ஒருவருக்கு இதயத் துடிப்பு இருந்தால், சற்று உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். பொதுவாக இம்மாதிரியான நிலை விளையாட்டு வீரர்களுக்கு இருக்கும்.
இதயத் துடிப்பு, இதயத்தின் செயல்பாடுகளைக் கண்டறிய உதவுவதோடு, புதிய ஆய்வு ஒன்றில் இதயத் துடிப்பு உடல்நல பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. முக்கியமாக இதயத் துடிப்பிற்கும், சர்க்கரை நோய்க்கும் சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது.
புதிய ஆய்வில், வேகமான இதயத் துடிப்பைக் கொண்டவர்களுக்கு, சர்க்கரை நோய்க்கான அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புதிய ஆய்வில், வேகமான இதயத் துடிப்பைக் கொண்டவர்களுக்கு, சர்க்கரை நோய்க்கான அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.