மத்திய அமைச்சர் கேட்ட கேள்விக்கு இதுவரை யாருமே பதில் சரியாக அளிக்கவில்லை. மாறாக அவரை ஏசத்தான் செய்தீர்கள். அவருக்கு நான் பதில் அளிக்கின்றேன்:"
**********************************
**********************************
"1) இஸ்லாமிய மார்க்க வழிபாடு 5 வேளை தொழுகை கட்டாய கடமை."
"2) ஒரு மனிதனுக்கு உண்ண உணவு இல்லை என்றால் கூட 5 வேளை தொழுகையை விடக்கூடாது"
"3) ஒருவன் போராட்டம், வேலை, போர், கல்வி, உழைப்பு, காவல் பணி இதில் எதில் ஈடுபட்டாலும் தொழுகை மிக அவசியமான ஒன்று".
"4) போராட்டத்திற்கும் இஸ்லாமிய மக்களுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கலாம் ஆனால் தொழுகைக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் தொடர்பு உள்ளது அதை யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது".
"5) ஒருவனுக்கு 7 வயது ஆகிவிட்டால் தொழுகை கட்டாய கடமையாக்கப்பட்டு உள்ளது".
"6) ஒரு மனிதன் கடுமையான நோயினால் பாதிக்கப்படும் போது மட்டுமே தொழுகை அவனுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது"
"7) தொழுகையின் அருமை பற்றி எனக்கே தெரியாது அதனை உணர வைத்தது காபத்துல்லாவில் எனக்கு கிடைத்த வரம்"
"8) தொழுகை நடத்துவது மதவெறியை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அல்ல."
"9) தொழுகை நடத்துவது இறைவன் நம்மை படைத்து இந்த உலகில் வாழவைத்து உள்ளதற்கு நன்றி செய்யும் ஒரு வகை கடமையாகும்."
"10) 3 வேளை நாம் உண்ணுவது இந்த உலக வாழ்க்கைக்காக அதுபோல 5 வேளை தொழுகை நடத்துவது மறுமையின் வாழ்க்கைக்காக மட்டுமே தவிர மதத்தை பரப்புவதற்கு அல்ல"
பதிவு: Jaber Sadhik