சனி, 14 ஜனவரி, 2017

மரபணு மாற்றப்பட்ட மீன்

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பற்றிய குறைகள் அதிகம். நிறைகள் குறைவே. அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட மிருகங்களை உருவாக ஆரம்பித்து விட்டார்கள்.
400x400_IMAGE62552156
சாலமன் (Salmon) என்ற மீன் அமெரிக்காவில் அதிகம் உண்ணப்படுகிறது. அட்லாண்டிக் சால்மன் எனப்படும் இந்த மீன் வகை ஒரு காலத்தில் அட்லாண்டிக் மகாகடல் முழுவதும் .பரவி இருந்தது.
அளவுக்கு மீறி இந்த மீன்களை பிடித்ததால் இவை இப்போது அழிந்து வருகின்றன. அதனால் captive வழியாக மீன்களை வளர்த்து அவற்றை விற்க ஆரம்பித்தார்கள் அமெரிக்கர்கள். நம் ஊரில் ப்ராய்லர் கோழி வளர்ப்பது போல்.
இந்த மீன்கள் முழு அளவுக்கு வளர 36 மாதம் ஆகும். எதிலும் பேராசை என வேலை செய்யும் மனிதன் சீக்கிரம் இந்த மீனை வளர்த்து பணம் செய்வது என்று ஆய்வு செய்து வழியும் கண்டு பிடித்து விட்டான்.
மரபணு மாற்றம் செய்து 36 மாதத்தில் வளரும் மீன் 18 மாதங்களிலே வளர்ந்து விடுகிறது. இயற்கையில் உள்ள சால்மன் ஒரு வருடத்தில் சில மாதங்களே வளரும், ஆனால் Ocean Pout Eel என்ற மற்றொரு மீனில் இருந்து மரபணுவை சேர்த்து இந்த மீனை உருவாக்கி உள்ளனர்.
அமெரிக்க Food and Drug Administration இந்த மீன்கள் எந்த விதமான கெடுதலும் இல்லை என்றும் இவற்றை உண்ணலாம் என்று அறிவித்து விட்டது.
இப்படி இயற்கை விதிகளை மாற்றி ஒரு உயிர் இனத்தில் இருந்து மற்றொரு இனத்தை மரபணு அளவில் சேர்த்து மனிதன் இப்போது விளையாட ஆரம்பித்துள்ளான்.
இதன் நீண்ட நாள் தாக்கங்கள் (Long term implications) யாருக்கும் தெரியாது.
இயற்கையின் பரிமாண வளர்ச்சி மூலம் பல லட்சம் வருடங்கள் மூலம் உண்டான உயிர் இனங்கள் இனி மனிதன் வீட்டின் அறையிலே உண்டாகலாம். மரபணு மாற்றம் என்றாலே விளைவு இல்லாமல் இருக்குமா?