காங்கிரசைச் சேர்ந்த ஜோதிமணிக்கு எதிராக வாட்ஸ்அப் குழுவில் ஆபாச பேச்சுகள் பகிரப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜோதிமணியையும் அந்த வாட்ஸ்அப் குழுவில் சேர்த்து, அவருக்கு எதிராகவே ஆபாச வார்த்தைகளை சிலர் பயன்படுத்தியுள்ளனர். இதைக் கண்டு துவண்டு போகாமல், பொது வெளியில் அதைப் பகிரங்கப்படுத்தி பெண்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்திருக்கிறார் ஜோதிமணி.
சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் சமூக ஊடங்களில் ஜோதிமணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பெண்களை அவதூறுகளிலிருந்து மீட்பதற்கான போராட்டத்தில் இணையுங்கள் என்று ஜோதிமணி அழைப்பு விடுத்துள்ளார்.
பதிவு செய்த நாள் : January 01, 2017 - 08:13 AM