திங்கள், 2 ஜனவரி, 2017

மகாத்மா காந்தி சிலை உடைப்பு: எம்.பி.சி.சிவமோகன் பகிரங்க கண்டன அறிக்கை.


மகாத்மா காந்தி ஒரு உலகம் போற்றும் அஹிம்சா வாதி. அணு ஆயுதங்களை விடவும் மனோ திடம் கொண்ட அஹிம்சை போராட்டங்கள் வெற்றி பெறும் என்பதை உலகத்திற்கு காட்டியவர். தனிமனிதனாக போராடி தன்னுயிரையும் ஈய்த்தார். தென்னாபிரிக்காவில் தொடங்கிய அவரது அஹிம்சை போராட்டம் இந்தியாவில் விரிவடைந்தபோது அது ஆசிய விடுதலையாக வெற்றியுடன் உருப்பெற்றது.
Ganthi-silai-arikai
அவர் எடுத்துக்கொண்ட அஹிம்சை என்ற ஆயுதம் உலகெங்கும் அவரை அஹிம்சையின் தந்தையாக ஏற்றுக்கொள்ள வைத்தது. அதனால் தான் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் காந்தி அடிகளது உருவச் சிலைகள் வைத்து போற்றப்படுகிறது. அவரது தென்னாபிரிக்க இன ஒதுக்கல் கொள்கைக்கெதிரான போராட்டம் இன்று அங்கு ஒரு இன விடுதலையை தந்துள்ளது. இந்தியாவில் அவர் நடத்திய ஆங்கிலேயரின் உப்பு வரிக்கு எதிரான அஹிம்சை போராட்டம், வெள்ளையனே வெளியேறு அஹிம்சை போராட்டம், அவரது ஒத்துழையாமை இயக்கம் போன்றவை இறுதியில் இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கை உட்பட பல தெற்காசிய நாடுகளுக்கு விடுதலையை தேடி தந்தது.
அதில் 2016 மார்கழி 31 இற்கு முன் செயல்படுத்தப்பட வேண்டியது என்பதால் இறுதி நடைமுறைகள் சில செயற்படுத்த தாமதம் ஏற்பட்டிருந்தது. எனவே இறுதியாக 19.12.2016 நடைபெற்ற முல்லை மாவட்ட இணைப்பு குழுவில் விவாதிக்கப்பட்டு சிலை அமைப்புக்கான தழுவல் அனுமதியும் வழங்கப்பட்டது.அப்படியிருக்க அடையாளம் காணப்படாத விஷமிகள் சிலர் அமைக்கப்பட்டு வந்த மகாத்மா காந்தி அவர்களின் சிலையை உடைத்தது அநாகரீகமான செயல். மேற்படி விடயத்தில் ஈழத்தமிழர்கள்பால் பழி சுமத்தும் ஈழ விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். எனவே நடந்து முடிந்த இந்த பாதக செயலை எவர் செய்திருந்தாலும் பகிரங்கமாக கண்டித்து நிற்கிறேன்மேற்படி கண்டன அறிக்கை தமிழரசுக்கட்சி தலைவருடன் கலந்துரையாடிய பின் அவரது அறிவுறுத்தலுக்கு அமைவாக என்னால் விடுக்கப்படுகிறது

http://kaalaimalar.net/magathma-gandi-leader/