கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளன. உலகம் முழுவதும் இருந்து போராட்டத்துக்கு ஆதரவு திரண்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலமைச்சரான பினராயி விஜயன், தமிழர்களின் போராட்டத்துக்கும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர் பானங்களை எதிர்த்து வந்த பினராயி விஜயன், இளநீர், நுங்கு போன்ற நமது விவசாய விலை பொருட்களை சந்தைக்கு கொண்டு வரும் நல்ல சந்தர்ப்பம் இது என்றார்.
மேலும், தமிழர்களின் போராட்டத்துக்கு தான் தோள் கொடுப்பதாகவும், இது தமிழர்களின் உரிமை, தமிழர்களின் கலாச்சாரம், இதை யாரும் தடுக்க கூடாது. இந்த உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்துக்கும், போராடும் இளைஞர்களுக்கும், தான் என்றும் ஆதரவோடு இருப்பேன் என பினராயி விஜயன் ஆவேசமாக கூறியுள்ளார்.
நதிநீர் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் பல முரண்பாடுகள் இருப்பினும், பினராயி விஜயன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குர்ல் கொடுத்து இருப்பது, தமிழர்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.