வெள்ளி, 13 ஜனவரி, 2017

குட்டித் தூக்கம் போடுபவர்கள் சோம்பேறிகளா?

மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவோருக்கு நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மதிய உணவிற்கு பிறகு ஒரு மணி நேரம் குட்டித் தூக்கம் போடுவது மூளையைச் சுறுசுறுப்பாக்கும் எனவும் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 3,000 பேரிடம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர். மதிய உணவுக்குப் பின் தூங்கியவர்களின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களின் மூளை ஐந்து வயது இளமையாகி விடும் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
30 முதல் 90 நிமிடங்கள் வரை மதிய நேரத்தில் தூங்கியவர்கள் அலுவலகத்தில் பணிகளை விரைவாக முடிப்பதுடன், கணித சிக்கல்கள் மற்றும் சில கடினமான வரைபடங்களை எளிதாக செய்து முடிக்கின்றனர் என்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 60 சதவீதம் பேர் மதிய உணவுக்குப் பிறகு 63 நிமிடங்கள் தூங்குகிறார்கள் என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.