வெள்ளி, 13 ஜனவரி, 2017

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா? முடியவே முடியாது..சீறுகிறார் மார்க்கண்டேய கட்ஜூ

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா? முடியவே முடியாது..சீறுகிறார் மார்க்கண்டேய கட்ஜூ
ஜல்லிகட்டு மீதான தடை எப்போது நீக்கப்படும் என்று தமிழக மக்கள் ஆவலோடுகாத்திருக்கிறார்கள். ஒரு விலங்கையும், மனிதனையும் சமதளத்தில் வைத்துப் பார்க்கக்கூடாது. உதாரணமாக, குளத்தில் மீன்பிடிக்கிறோம். தூண்டிலில் மீன் சிக்கி அதை தரையில் கொண்டு வந்துபோடும் போது, மூச்சுத்திணறி மீன் செத்து விடுகிறது. இதனால் மீனை கொடுமைப்படுத்துகிறோம் என்று அர்த்தமா?. அந்த மீனைப் பிடித்து சமைத்து சாப்பிடுகிறோம். அதற்காக மீனை சாப்பிட தடை விதிக்கமுடியுமா?
ஆதலால், மிருகவவதைச் சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். இதை தமிழக மக்களின் சார்பாக வேண்டுகோளாக வைக்கிறேன் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேயகட்ஜூ கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கும் நடிவடிக்கைகளில் மத்திய அரசு துளியும் அக்கறை காட்டவில்லை.
அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தடையை மீறி ஜல்லிக்கடை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் கடுப்பாக சுப்ரமனியன் சாமி மற்றும் பீட்டா அமைப்பினர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் அரசியல் சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்தி அரசைக் கலைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த செயல் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பீட்டாவின் இந்த கோரிக்கைக்கு உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேயகட்ஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்ந இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு குறித்து சொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட  மார்க்கண்டேயகட்ஜூ,அவசரச்சட்டம் கொண்டு வருவதன் மூலம் ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்றார். அதே நேரத்தில் , ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி கேட்டபோது, சீறிய மார்க்கண்டேயகட்ஜூ, அது முடியவே முடியாது என மறுத்தார்.
அரசு இயந்திரங்கள் செயல்படாத சூழல் ஏற்பட்டாலோ அல்லது சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறாமல் போனாலோ தான் ஒரு மாநிலத்தின் ஆட்சியை கலைக்க முடியும் என தெரிவித்தார்,
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மிருக வதை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து ஜல்லிக்கட்டை கட்டாயமாக நடத்த வேண்டும் என மார்க்கண்டேயகட்ஜூ தெரிவித்தார்.