தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற எக்காரணம் கொண்டும் ஒப்புதல் வழங்கக் கூடாதென, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு, அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 14 ஆண்டுகளில் 26 புள்ளி 42 லட்சம் ஏக்கர் விவசாய நிலம், வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்தக் கூடாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் வரன்முறைப்படுத்தப் போவதாக தனது பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்திருப்பதாகவும், மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த மனு, வரும் 9ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.