21/3/2017 உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 118 இடத்திலிருந்து 122 வது இடத்திற்கு இந்தியா பின்தங்கியுள்ளது. நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் 155 நாடுகளில் தனி நபர் வருமானம், சமூக நிலை, நலவாழ்வு, வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், நேர்மை, வெளிப்படைத் தன்மை ஆகிய புள்ளி விவரங்களைக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை, நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
►இந்த பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்த டென்மார்க்கை பின்னுக்கு தள்ளி நார்வே முதலிடத்தை பிடித்துள்ளது.
►3 முறை முதலிடத்தை பிடித்த டென்மார்க் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
►ஜஸ்லாந்து 3 வது இடத்தையும், சுவிட்சர்லாந்து 4 வது இடத்தையும் பெற்றுள்ளன.
►கடந்த ஆண்டு 118 இடத்தில் இருந்த இந்தியா 122 வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
►இந்தியாவின் அண்டைநாடுகளான சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் , நேபாளம் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முன்னேறி உள்ளன.
►இந்த பட்டியலில் சீனா 79ஆம் இடத்திலும், பாகிஸ்தான் எண்பதாம் இடத்திலும் நேபாளம் 99ஆம் இடத்திலும் உள்ளன.
►வங்கதேசம் 110ஆம் இடத்திலும் ஈராக் 117ஆம் இடத்திலும், இலங்கை 120ஆம் இடத்திலும் உள்ளன.