திங்கள், 6 மார்ச், 2017

இயற்கையை அழித்து பூமியை வறட்சி ஆக்கி விவசாயத்தை ஒழித்து 6000 கோடியில் கிடைக்கும் மீத்தேன் வாயுவை

நமது மத்திய, மாநில அரசு நிர்வாகம்... இப்பொழுது ... முட்டாள்களால் ... நடத்தப் படுகின்றது...
இயற்கையை அழித்து... பூமியை வறட்சி ஆக்கி... விவசாயத்தை ஒழித்து... 6000 கோடியில் கிடைக்கும் மீத்தேன் வாயுவை ...1850 கோடியில் எடுக்க முடியும்...
எனவே நமக்கு, முப்பது வருடத்தில் தீர்ந்துவிடும் மீத்தேன் தேவையில்லை. ஆண்டாண்டுக்கும் கிடைக்கக்கூடிய சாண எரிவாயுவே நமக்குத் தேவை...
வளம் மிகுந்த விவசாய நிலத்தை அழித்து, நீராதாரங்களை அழித்து ஹைட்ரோகார்பன் எரிபொருள் எடுப்பது மாபெரும் தவறு...
புகைப்படத்தில் ஜெர்மனியில் உள்ள ஒரு BIO GAS PLANT ஐப் பாருங்கள்!
சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை.
40 கிலோ என்று கூட வைத்துகொள்ளலாம்..
நெடுவாசல் மீத்தேன் திட்டம் மூலம் 5 மில்லியன் டன் மீத்தேன் எடுக்க திட்டம் உள்ளது. இதற்கான பட்ஜெட் 6000 கோடி.
கால அவகாசம் முப்பது வருடம்.
இதே அளவு மீத்தேன் வாயுவை சாணத்தில் எடுக்க வேண்டுமானால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் தேவை.
இதற்கான செலவு 1850 கோடிகள்.
...........................................
இயற்கையை அழித்து பூமியை வறட்சி ஆக்கி விவசாயத்தை ஒழித்து 6000 கோடியில் கிடைக்கும் மீத்தேன் வாயுவை
1850 கோடியில் எடுக்க முடியும்.
கூடுதலாக கிடைக்கும் பலன்கள்
1) பால் வளம் பெருகும்
2) விவசாயிகள் வாழ்வு மேம்படும்
3) இயற்கை வளம் மேம்படும்.
4) விவசாயம் செழிக்கும்.
5) முக்கியமாக சுற்றுச்சூழல் பாதிக்காது.
6) இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் மாடுகளை
இறைச்சிக்காக கொல்லாமல் அவற்றை வாழ விட்டால், அவை தனது வாழ்நாள் முழுவதும் இத்திட்டத்துக்கு மூலப்பொருளான சாணத்தை தந்துகொண்டே இருக்கும்
எனவே நமக்கு, முப்பது வருடத்தில் தீர்ந்துவிடும் மீத்தேன் தேவையில்லை.
ஆண்டாண்டுக்கும் கிடைக்கக்கூடிய சாண எரிவாயுவே நமக்குத் தேவை.
வளம் மிகுந்த விவசாய நிலத்தை அழித்து, நீராதாரங்களை அழித்து ஹைட்ரோகார்பன் எரிபொருள் எடுப்பது மாபெரும் தவறு.
நம் வருங்கால தலைமுறையின் வாழ்வாதாரம் காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. நாம் தினமும் உண்ணும் உணவிற்கு காரணமான விவசாயிகளை, விவசாயத்தை காப்பது நம் அனைவரின் இன்றியமையாத கடமையாகும்.
Image may contain: outdoor

Related Posts: