வெள்ளி, 10 மார்ச், 2017

புதுக்கோட்டையில் மட்டும் மீத்தேன் எடுப்பு அல்ல.


தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மீத்தேன் கிணறுகள் தோண்ட மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் அனைத்தும் பாலை நிலங்களல்ல. முப்போகம் விளையும் டெல்டா மாவட்ட விவசாய நிலங்கள். ஏனென்றால், இங்கு மட்டும்தான் மீத்தேன் மிக அதிகமாகக் கிடைக்கும்.
ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இது ஓர் உலக வர்த்தகம். இன்னும் சில நாட்களில் நியாய விலைக்கடைகளில் அரிசி கிடைக்காது. அதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது. மீத்தேன் எடுத்தால் கோடிக்கணக்கில் அவர்களுக்கு இலாபம் கிடைக்கும். ஆனால், விவசாயம் சாகும். அன்று அரிசியின் விலை உயரும். பணக்காரர்கள் மட்டும் வாங்கும் போகப் பொருளாக பாவிக்கப்படும். தற்போதைய இவ்வுலகில் Organic உணவுகளே மிகப்பெரிய வியாபார சந்தை என்பதை மறந்துவிடாதீர்கள். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பழைய கஞ்சியில், இட்லியிலும் இல்லாத சத்து வேறெதிலும் இல்லை. ஒருநாள், இவை அனைத்திற்கும் நாம் பிச்சை பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும். காசு இருந்தால் மட்டுமே நீங்கள் பிழைக்க முடியும்.
ஒன்றிற்கும் லாயக்கில்லாத எடப்பாடியை முதலமைச்சராக அழகு பார்த்ததற்கு நமக்குக் கிடைத்த பரிசுதான் மீத்தேன். இன்னும் நான்கு வருடங்கள் இதை விட அநியாயங்கள் நடக்கலாம். நாம்தான் குரல் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவை பணம், பணம், பணம் மட்டுமே. விவசாயிகள் மட்டும் பொதுமக்களின் நலன் அல்ல.
நாம் வென்றெடுத்த ஜல்லிக்கட்டு போராட்டம் மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், அதைவிட மும்மரமாக நாம் போராட வேண்டியது இந்த விசயத்திற்காக. இது மட்டும் நடந்தால், நீங்கள் இவ்வளவு நாள் போராடி உங்கள் வீட்டு மாட்டிற்காக பெற்ற ஜல்லிக்கட்டு சட்டம் வீணே. ஆம். ஒருநாள் உங்கள் மாடு சாப்பிட எதுவுமில்லாமல் அழியும். மாடென்ன மாடு.. உங்களுக்கும் அதே நிலைமை தான்.
இத்திட்டம் சரி என்றால், எதற்காக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில் மீத்தேன் திட்டம் நிராகரிக்கப்பட்டு, அவர் இறந்தபின் இன்று மீண்டும் ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் திணிக்கப்பட வேண்டும்.
பல்வேறு உலக நாடுகளில் இதற்கான எதிர்ப்புகள் மிக மிக அதிகம். நம் மக்களுக்கு நாம்தான் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். படித்த இளைஞர்கள் புரியாதவர்களுக்கு விளக்கவும். எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத இத்திட்டம் நிறைவேறினால், இதுதான் நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப்பெரிய துரோகம்.
இது ஜல்லிக்கட்டை விட மிக முக்கிய விசயம். புரிந்துகொள்ளுங்கள். மத்திய அரசையும் மாநில அரசையும் நம்பாதீர்கள். விவசாயம்தான் சோறு போடும். உங்கள் எடப்பாடியோ, மோடியோ, அல்லது அவர் வந்து திறந்து வைத்த 200 அடி சிலையோ அல்ல. கடவுள் பக்தி இருக்க வேண்டியதுதான். இருக்கின்ற காட்டையும் விவசாயத்தையும் அழித்துவிட்டு வெறும் சிலையை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்.
ஈத்தேன், மீத்தேன், புரப்பேன், பியூட்டேன், பென்டேன், ஹெக்சேன் என்பவை அவை பெற்ற 1,2,3,4,5,6 என்ற கார்பன்களைப் பெற்ற முறையின் அடிப்படையிலே கூறப்படும் வேதியியல் பரிமாணங்கள். இதில் ஹைட்ரோகார்பன் என்பது இரண்டாவதாகக் கூறப்பட்ட மீத்தேனின் வேதியியல் பெயராகும்.
நம்மை முட்டாள்கள் என்று நினைத்து விட்டார்கள் போல.
என்ன செய்வது, முட்டாள் முதலமைச்சர் இருந்தால் இதெல்லாம் சாத்தியம்தான். ஆனால், மக்களாகிய நாம்தான் இதை உடைத்தெறிய வேண்டும். இது நம் நிலம், நம் வீடு, நம் நாடு.
-வேதியியல் மாணவன்