நீங்கள் இப்போது உங்கள் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இங்கே, நீங்கள் உங்கள் குறிப்பு ஐடியை உள்ளிட தேவையில்லை. பதிலாக OTP-ஐ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். பின்னர் உங்கள் தடுப்பூசி சான்றிதழைப் பெறுவீர்கள்.
இப்போது வரை, பயனர்கள் ஆரோக்யா சேது செயலி மூலம் மட்டுமே சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய முடியும். வாட்ஸ்அப்பில் உள்ள MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் சாட்போட் இப்போது சான்றிதழைப் பதிவிறக்க உதவுகிறது. COVID-19 தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சுற்றி தவறான தகவல்களைத் தடுக்கவும் இந்த போட், மார்ச் 2020-ல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவிட் -19 தடுப்பூசியின் முதல் அல்லது இரண்டாவது மருந்தைப் பெற்றவுடன், நீங்கள் தடுப்பூசி சான்றிதழைப் பெறுவீர்கள். உங்களுக்குத் தெரியாத நிலையில், நீங்கள் இந்தியாவில் அல்லது நாட்டிற்கு வெளியே எங்கும் பயணம் செய்யத் திட்டமிட்டால், நீங்கள் உங்கள் இறுதி தடுப்பூசி சான்றிதழைக் காட்ட வேண்டும்.
உங்களிடம் இறுதி தடுப்பூசி சான்றிதழ் இருந்தால், சில சந்தர்ப்பங்களில் நீங்கள் கோவிட் -19 சோதனை செய்ய வேண்டியதில்லை. 60 வினாடிகளுக்குள் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது பற்றி மேலும் அறியப் படிக்கவும்.
வாட்ஸ்அப்பில் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு பெறுவது?
ஸ்டெப் 1: வாட்ஸ்அப்பைத் திறந்து, +91 9013151515 என்ற எண்ணிற்கு “ஹாய்” என்று செய்தியை விடுங்கள். உங்களிடம் ஏற்கனவே இந்த எண் இல்லையென்றால், நீங்கள் அதை “கொரோனா ஹெல்ப் டெஸ்க் போட்” ஆக சேமிக்கலாம்.
ஸ்டெப் 2: நீங்கள் செய்தியை அனுப்பிய பிறகு, போட் COVID-19 தொடர்பான தலைப்புகளின் பட்டியலைக் காண்பிக்கும். பட்டியலில், இரண்டாவது வரியில் “சான்றிதழ் பதிவிறக்க” என்பதைக் காண்பீர்கள். எனவே, “2” என டைப் செய்து அனுப்பவும்.
ஸ்டெப் 3: போட், மீண்டும் மூன்று விருப்பங்களைக் காண்பிக்கும். அப்போது நீங்கள் “3” என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். நீங்கள் தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மூன்றாவது விருப்பம் கூறுகிறது.
ஸ்டெப் 4: உங்கள் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை நீங்கள் சாட்டில் அனுப்ப வேண்டும்.
குறிப்பு: உங்கள் வாட்ஸ்அப் எண், தடுப்பூசி பெறக் கோவின்-ல் பதிவு செய்த எண்ணிலிருந்து வேறுபட்டால், உங்களுக்கு ஓடிபி கிடைக்காது. எனவே நீங்கள் ஆரோக்கிய சேது பயன்பாட்டிலிருந்து சான்றிதழைப் பதிவிறக்க வேண்டும்.
ஸ்டெப் 5: நீங்கள் OTP-ஐ உள்ளிட்டவுடன், CoWIN இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட நபர்களின் பெயர்களை போட் காண்பிக்கும்.
ஸ்டெப் 6: தடுப்பூசி சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் பயனரின் எண்ணை நீங்கள் இப்போது டைப் செய்ய வேண்டும். போட் பின்னர் வாட்ஸ்அப்பில் தடுப்பூசி சான்றிதழை PDF வடிவத்தில் அனுப்பும்.
source https://tamil.indianexpress.com/technology/whatsapp-how-to-download-covid19-vaccination-certificate-guide-tamil-news-331209/