வெள்ளி, 10 மார்ச், 2017

கண்ணூரில் வெடிகுண்டு வீச்சு: பாஜ பயங்கரவாதிகள் சதிச் செயல் ! பாஜக தலைவர் உட்பட 7 பேர் படுகாயம்!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கண்ணூரில் வெடிகுண்டு வீச்சு, அரிவாள் வெட்டு சம்பவங்களில் பாஜ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் கண்ணூரில் பாஜ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் இரு கட்சிகளையும் சேர்ந்த 6க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணூர் மாவட்டம் தலாப் என்ற இடத்தில் பாஜ தொண்டர்களை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் கண்ணூர் மாவட்ட பாஜ துணை தலைவர் சுசில்குமார் (48), சிவதாஸ் (40), மிதுன் (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் கண்ணூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில் கண்ணூர் மாவட்டம் கதிரூர் அருகே மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மீது ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசியது இதில் சுரேந்திரன், வினிஸ் உள்பட 4 பேர் காயமடைந்தனர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் கண்ணூரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



http://kaalaimalar.net/kannur-mandal-vice-president-sushil-attacked/