10 08 2021
Rahul says visiting Kashmir feels like coming home : செவ்வாய்க்கிழமை அன்று காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு பயணம் சென்ற ராகுல் காந்தி, காஷ்மீருக்கு வருவது வீட்டிற்கு வருவது போன்று உள்ளது. சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை துவங்கி வைத்து கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர் வெளிப்படையாகவே மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். என்னுடைய குடும்பம் டெல்லியில் வாழ்கிறது. டெல்லிக்கு செல்வதற்கு முன்பு எங்களின் குடும்பம் அலகாபாத்தில் வாழ்ந்தது. அதற்கு முன்பு எங்களின் குடும்பம் இங்கே வாழந்தது என்று கூறினார் ராகுல் காந்தி.
உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய குடும்பத்தினர் இந்த ஜீலம் நதியின் நீரை குடித்திருக்கலாம். காஷ்மீரியாத், இந்த மண்ணின் கலாச்சாரமும் சிந்தனை செயல்முறையும் என்னிலும் இருக்கிறது. நான் இங்கே வரும்போதெல்லாம் நான் என்னுடைய வீட்டிற்கு வருவது போல் இருக்கிறது என்று தன்னுடைய குடும்பத்திற்கும் காஷ்மீருக்கும் இடையே இருக்கும் தொடர்பை குறிப்பிட்டார். மேலும் அன்பும் மரியாதையுடனும் நான் இங்கே வந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரான அவர், சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்பு மாநில அந்தஸ்த்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ”முதலில் மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும். பிறகு ஜனநாயக செயல்முறைகளை செயல்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார். அந்த நிகழ்விற்கு முன்பு, காஷ்மீர் பண்டிதர்கள் மிகவும் முக்கியமாக கருதும் புனித தளமான, மத்திய காஷ்மீரின் கந்தெர்பாலில் உள்ள மாதா கீர் பவானி கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்த்தினை வழங்க மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதை மேற்கூறிய அவர், குலாம் நபி அசாத் மேலும் பல பிரச்சனைகளை குறித்து நடந்து வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விவாதிக்க நினைத்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கப்படவில்லை என்பதை எடுத்துக் கூறினார்.
அதிகப்படியான மக்களவை தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலம் இல்லை ஜம்மு காஷ்மீர். ஆனால் இந்த விவகாரம் குறித்து கட்டாயமாக அழுத்தம் தருவோம் என்று மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் கூறியதாக ராகுல் காந்தி கூறினார்.
இது பல மக்களவை இடங்களைக் கொண்ட மாநிலம் அல்ல … அது இப்போது ஒரு மாநிலம்கூட இல்லை. ஆனால் ஜம்மு காஷ்மீரின் பலம் நீங்கள் வாழும் முறை. இந்தியாவும் அதன் அடித்தளமும் காஷ்மீரியத்தைக் கொண்டுள்ளது. இந்த உணர்வு எனக்கும் இருக்கிறது. நீங்கள் என்னை அன்புடனும் பாசத்துடனும் என்ன செய்ய வைக்கிறீர்களோ, அதை நீங்கள் ஒருபோதும் சக்தியாலும் வெறுப்பாலும் அடைய முடியாது. அதுதான் காஷ்மீரியத். நீங்கள் அன்புடனும் மரியாதையுடனும் ஜம்மு காஷ்மீரை வைத்திருந்தால், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து முடிப்பீர்கள், ”என்றார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நாட்டை ஒன்றிணைத்தது. ஆனால் பாஜக பிரித்தாளும் சித்தாந்தத்தை நம்புகிறது. நாங்கள் ஆட்சியில் இருந்த போது பஞ்சாயத்து தேர்தல்கள், உடான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய தொழிற்துறையினரை இங்கே கொண்டு வந்தோம். நாங்கள் ஒற்றுமையையும் ஒன்றிணைந்து இருக்கவும் முயற்சி மேற்கொண்டோம். ஆனால் பாஜக அதை தாக்குகிறது என்று அவர் கூறினார்.
காஷ்மீரில் புதிய கட்சி அலுவலகம் புதிய துவக்கம். தொழிலாளர்கள் கட்சியின் இராணுவம் என்றும் அவர் கூறினார்.
ஜம்மு -காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான மத்திய அரசின் ஆகஸ்ட் 2019 முடிவுகளுக்குப் பிறகு தனது வருகையைப் பற்றி குறிப்பிட்ட அவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பே வர முயற்சி செய்தேன். ஆனால் விமான நிலையத்திற்கு வெளியே என்னை அனுமதிக்கவில்லை என்று குறிபிட்டார். மேலும் இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக அவர் ஜம்மு மற்றும் லடாக் செல்ல உள்ளார்.
கூட்டத்தில் உரையாற்றுவதற்கு முன்பு, குலாம் நபி, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில், நடைபெறும் கூட்டத்தொடர் முடிய இருக்கும் மூன்று நாட்களுக்குள், எழுப்ப வேண்டும் என்று ராகுலிடம் கேட்டுக் கொண்டார். ப்போது தான் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்பட்டு, நிலமும் வேலைக்கான உரிமைகளும் நிலைநாட்டப்படும் என்று கூறினார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு வகித்த குலாம் நபி ஆசாத் மற்றும் ராகுல் காந்தி, ஆகஸ்ட் 5ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கே செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தை நாடிய போது மிகவும் குறைவான சாத்தியமான அணுகலை மட்டுமே வழங்கியது. நான் பாரமுல்லா, ஆனந்த்நாக் மற்றும் ஜம்முவுக்கு செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டேன் என்று கூறினார் ஆசாத்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் அளித்த உத்தரவாதங்கள் நிறைவேறும் என்று ஆசாத் நம்பிக்கை தெரிவித்தார்.வர்கள் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும், பின்னர் தேர்தலை நடத்த வேண்டும், ”என்றும் அவர் கூறினார்.
துணை நிலை ஆளுநரால் அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும் டெல்லி போன்று ஜம்மு காஷ்மீர் இருக்க கூடாது. ஜம்மு காஷ்மீர் எல்லை மாநிலமாகும். அங்கே துணை நிலை ஆளுநர் ஆட்சி நடத்தக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், நிலங்களை பாதுகாக்கும் உரிமைகளை அரசியலமைப்பு பிரிவு 370 வழங்கவில்லை. புதிய சட்டமும் இல்லை. இந்த சட்டம் 1927ம் ஆண்டு மகாராஜா ஹரி சிங்கால் பிறப்பிக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் நில உரிமைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. சமீபத்தில் ஹிமாச்சல் பிரதேசம் கூட தங்களின் சட்டமன்றத்தில் இது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஜம்மு காஷ்மீரிடம் இருந்து மட்டும் அதனை ஏன் பறிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் தொழில் நடவடிக்கைகள் 65% பாதிக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
source https://tamil.indianexpress.com/india/rahul-says-visiting-kashmir-feels-like-coming-home-331171/