ஒட்டுமொத்த இந்தியாவின் ஆட்சி அமைக்கத் தேவையான அதிக எம்.பி.க்களை கொடுக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம்… உத்தரகண்ட் பிரிவதற்கு முன் உத்தரப்பிரதேசம் ஜம்போ மாநிலமாக இருந்தது.
அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த உத்தரப்பிரதேச மாநிலம், முலாயம்சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் கன்சிராம் வருகைக்குப் பிறகு காங்கிரஸ் கோட்டையில் ஓட்டை விழுந்தது.
இந்த மூவர் அணிகளுக்கு இடையே புகுந்து பாபர் மசூதி, ராம்ஜென்மபூமி, விவகாரத்தை முன்னிறுத்தி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அப்போது கல்லாயண் சிங் பா.ஜ.க. முதல் அமைச்சரானார். பின்னர் அமைந்த கூட்டணியில் ராஜ்நாத்சிங்கும் சில காலம் முதல் அமைச்சராக இருந்தார்.
கடந்த 15 ஆண்டுகளாக உ.பி.யில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது பா.ஜ.க. மாயாவதியும், முலாயும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வந்தனர். இனி பா.ஜ.க.வுக்கு எதிர்காலமே இல்லை என்ற நிலை உருவானது.
பணமதிப்பிழப்பு விவகாரம் மேலும் சூட்டைக் கிழப்பி பா.ஜ.க. மொத்தமாக அவுட் என்ற நிலையையும் உருவாக்கியது. ஆனால் அத்தனையும் தவிடு பொடியாக்கி மெஜாரிட்டியை விட சுமார் 90 சீட்டுகள் அதிகம் பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது பா.ஜ.க.
இது எப்படி சாத்தியமானது ?
உத்தரப்பிரதே தேர்தலை அறிவிப்பதற்கு முன்பாகவே மோடியும் அமித்ஷாவும் அமர்ந்து ஸ்கெட்ச் போட்டுவிட்டனர். 2014 நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க. எந்த முறையில் அனுகியதோ, அதோ பாணியில் உ.பி.யையும் எதிர்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
உத்தரகண்டில் வெற்றி நிச்சயம் என்ற நிலையில் பஞ்சாப் மணிப்பூர் கோவாவைப் பற்றி கவலைப் படாமல் ஒட்டுமொத்த சக்தியையும் பலத்தையும் திரட்டி உ.பி.யில் களமிறங்கினர் பா.ஜ.க.வினர்.
பிரசாந்த் கிஷோர், சுனில் போன்ற தேர்தல் கள வல்லுநர்களைக் கொண்டு திட்டங்கள் தீட்டப்பட்டது.
அமித்ஷாவின் நேரடிக் கண்காணிப்பில் பல குழுக்கள் டெல்லியில் இருந்தே செயல்பட்டன. இவர்கள் கிராமம் வாரியாக நகர வாரியாக மாநகர வாரியாக பிரித்து வாக்காளர்களை பிரித்து மேய்ந்துவிட்டனர்.
election strategy எனப்படும் தேர்தல் உக்தியின் மூலமாகவே இந்த மிகப்பெரிய வெற்றி பா.ஜ.க.வுக்கு சாத்தியமாகியிருக்கிறது..முதல் அமைச்சர் வேட்பாளரை எப்போதுமே அறிவிக்கும் பா.ஜ.க. இம்முறை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது மிக உன்னிப்பாக பார்க்கப்படுகிறது….
மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 310 தொகுதிகள் வரை பா.ஜ.க. வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் இது பா.ஜ.க.வைப் பொருத்தவரை இமாலய வெற்றி தான். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால் நிச்சயம் தோற்றுவிடுவோம் என தொகுதிகளை தேர்ந்தெடுத்து அத்தொகுதிகளுக்கு மட்டும் வாக்காளர்களுக்கு “செம” கவனிப்பு செய்யப்பட்டதாம்..
தோல்வி நிலையில் இருந்த தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற காரணமாக இருந்தது பெருமளவில் வாரி இறைக்கப்பட்ட பணம் என்று கூறப்படுகிறது.
எது எப்படியோ, சாம பேத தான தண்டம் முறைகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்திருக்கிறது மோடி அமித்ஷா கூட்டணி
source: kaalaimalar