தூத்துக்குடி வஉசி துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை படைத்துள்ளதாக துறைமுக பொறுப்புக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015 மற்றும் 2016ம் நிதியாண்டில் 36.85 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளதாகவும், கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 13.70 சதவீதம் கூடுதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்ததாலேயே இந்தச் சாதனை நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.