டெக்னாலஜி பீல்டில் தனி டிராக்கில் பயணிக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது நாற்பதாவது பிறந்த நாளை கொண்டாடியது.
கணினி துறையை இந்த நிறுவனத்தைத் தவிர்த்து தனியாகப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் வோஸ்நியாக் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 1976-ல் சிலிகான் வேலியின் ஒரு கார் ஷெட்டில் தொடங்கினர்.
ரூ.604 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சந்தை மதிப்புடன் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ள ஆப்பிள் நிறுவனம், தொழில்நுட்பத் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியதாக அறியப்படும் நிறுவனம். நாற்பதாவது வயதில் நிற்கும் இந்த நிறுவனம், ஆப்பிள் கணினிகள் மட்டுமின்றி ஐபாட், மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் என பறந்து விரிந்த சாம்ராஜ்யத்தை உள்ளடக்கியது.
இன்றைய தினத்தில் ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை அறிவு துறையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஆப்பிள் மொபைல் போன்களில் உள்ள ‘சிறி’ எனும் செயற்கை அறிவு செயலி இதற்கு சிறந்த உதாரணம். அடுத்தகட்டமாக செல்ஃப் டிரைவிங் கார்கள் எனப்படும் எதிர்கால டெக்னாலஜிக்காக ஆப்பிள் என்ஜினியர்கள் இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் சிலிகான் வேலி வட்டாரத்தில் பரபரப்பாக உலா வருகிறது.