சனி, 2 ஏப்ரல், 2016

ஆசியாவின் படிப்பறிவுமிக்க கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?..

ஆசியாவின் படிப்பறிவுமிக்க கிராமமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் உள்ள தோரா மாஃபி கிராமம் இத்தகைய பெருமைக்குரிய கிராமமாகத் திகழ்கிறது. இந்த கிராமத்தில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகள் முதல் 24 மணிநேர மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டு ஒரு முன்மாதிரி கிராமமாகத் திகழுகிறது.
தோரா மாஃபி கிராமம், 75 சதவீதத்துக்கும் மேலான படித்தவர்கள் உள்ள கிராமமாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. மூன்று சதுர கி.மீ. பரப்பளவில் அதிக படித்தவர்கள் வசிக்கும் கிராமம் என்ற பிரிவில் கின்னஸ் சாதனைக்கும் இந்த கிராமம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
Edu-up village