உத்தரப்பிரதேசத்தில் முதல் அமைச்சர் ஆதித்யநாத் துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா ஆகிய இருவரும் உள்துறையை சொந்தம் கொண்டாடி வருவதால் பா.ஜ.க.வுக்குள் கடும் குழப்பம் நிலவுகிறது..பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடி டெல்லியில் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்….
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 312 தொகுதிகளைக்கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. முதல் அமைச்சராக சாமியார் ஆதித்யநாத், துணை முதல் அமைச்சராக கேஷவ் பிரசாத் மவுரியா தினேஷ் சிங் ஆகியோர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் யாருக்கு இலாகா ஒதுக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.பிரதமர் மோடி,பா.ஜ.க.
தேசியத் தலைவர் அமித்ஷா, உள்ளிட்டரோர் பங்குபெறுகின்றனர்..
இதற்கிடையே உள்துறை இலாகாவவை கைப்பற்ற முதல்வர் ஆதித்யநாத்துக்கும் துணை முதல்வர் ஆதித்யநாத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் உள்துறையை யாருக்கு ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
47 இலாக்காகளைக் கொண்ட உத்தரப்பிரதேச அமைச்சரவையில் நிதித்துறை தங்களுக்கே வேண்டும் என்று இரண்டு துணை முதல்வர்களும் போட்டி போட்டு வருகின்றனர்…
பதவிச்சண்டையை மோடி எப்படி கையாள்வார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
source:kaalaimalar