புதன், 22 மார்ச், 2017

மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நிதியமைச்சர்! March 22, 2017

மத்திய, மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்கு செலவு செய்த 5 ஆயிரத்து 357 கோடி ரூபாயை மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்காமல் உள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை உள்பட 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், மத்திய அரசு நிலுவைத்தொகை வழங்க தனி அதிகாரியை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார். விரைவில் தமிழக அரசுக்கு நிதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி குற்றஞ்சாட்டியுள்ளனார். சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு இன்னும் ஒதுக்காததால், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

சட்டப்பேரவைக்குள் செய்தியாளர்களை அனுமதிக்காமல் வெளியே காத்திருக்க வைப்பது கண்டனத்திற்குரியது எனவும் இது தொடர்பாக காங்கிரஸ் எம்ல்ஏக்கள் அனைவரும் பேரவையில் குரல் கொடுப்பார்கள் என்றும் விஜயதரணி தெரிவித்தார். 

Related Posts: