சத்தீஸ்கர் மாநிலத்தின் சிர்மிரி என்னுமிடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஒரு மாதத்துக்கு மேலாகத் தீப்பிடித்து எரிவதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி எரிந்து சாம்பலாகி வருகிறது.
சிர்மிரி என்னுமிடத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஒரு மாதத்துக்கு முன் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தீயை உடனடியாகக் கட்டுப்படுத்தாததால், அங்குக் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரியில் பரவி, ஒரு மாதக்காலமாகத் தீப்பிடித்து வருகிறது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி எரிந்து சாம்பலாகி வருகிறது. அத்துடன் நிலக்கரியில் இருந்து எழும் நச்சுப் புகையால் சுற்றுப் பகுதியில் வாழும் மக்களுக்கு உடல் நலப் பாதிப்பு உண்டாகும் எனப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.