சனி, 25 மார்ச், 2017

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் மற்றும் சிறை!

24/3/2017,பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் உத்தரபிரதேசம், உத்தர்காண்ட் மாநிலங்களில் மிகப் பெரும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில நாட்களில்லேயே உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். மாநிலம் எங்கும் உள்ள பசுவதைக் கூடங்களை மூட உத்தரவிட்ட யோகி ஆதித்யாநாத், அரசு அலுவலகங்களில் பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்தவும் தடைவிதித்தார்.

இந்நிலையில் இதனைப் பின்பற்றி உத்தர்காண்ட் அரசும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் எச்சில் துப்பினால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தர்காண்ட் அரசின் நகர்புற மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.