பொறியியல் பட்டதாரிகள் கண்டிப்பாக இன்டர்ன்ஷிப் எனப்படும் தொழிற்சாலையில் முன் அனுபவம் பெறும் பயிற்சியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என AICTE மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
நாட்டில் சுமார் 65 சதவீத பொறியாளர்கள் ஆண்டுதோறும் வேலையில்லாமல் தவிப்பதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து பொறியாளர்களின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து போதிய தொழில்முறை பயிற்சி இல்லாததே பொறியாளர்களின் வேலையின்மை மற்றும் பணி சார்ந்த அறிவு இல்லாததற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து 4 ஆண்டுகள் பொறியியல் படிப்பில் இன்டர்ன்ஷிப் எனப்படும் தொழிற்சாலையில் முன் அனுபவம் பெறும் பயிற்சியை கட்டாயமாக்க AICTE மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.