புதன், 22 மார்ச், 2017

உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தமிழகம் இணைந்ததால் பலன்கள் கிடைத்துள்ளது? March 21, 2017

உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தமிழகம்  இணைந்ததால், இரண்டு முக்கிய பலன்கள் கிடைத்துள்ளதாக சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார். மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழகம்  இணைந்ததால்  இலவச அரிசி வழங்கும் திட்டம் பாதிக்கப்படாது எனவும் விளக்கம் அளித்துள்ளார். 

முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழ்நாடு இணைந்ததால் இலவச அரிசி வழங்க முடியாத நிலை ஏற்படும் என கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் காமராஜ், மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் காரணமாகவே தமிழகம் இணைந்தது எனவும், இதன் மூலம் ஒருபோதும் இலவச அரிசி திட்டம் முடக்கப்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 
மேலும் எந்த காரணத்தாலும் நியாய விலை கடைகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டு வரும் சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் நிறுத்தப்படாது என்றும் அமைச்சர் காமராஜ் உறுதி அளித்துள்ளார். 

Related Posts: