நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராக விலக்கு பெற்றதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பொன்.தங்கவேல் என்பவருக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கில் ஜார்ஜ் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தனி நீதிபதியிடம் மேல்முறையீடு செய்து விலக்கு பெற்றார்.
இந்த நிலையில் மற்றொரு வழக்குக்காக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன் காவல் ஆணையர் ஜார்ஜ் சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி ஆஜரானார். அப்போது மேல்முறையீடு செய்து ஜார்ஜ் விலக்கு பெற்றது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஆஜராவதாக உத்தரவாதம் கொடுத்ததற்காக, காவல் ஆணையர் ஜார்ஜ் மீது மீண்டும் அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என குறிப்பிட்டார்.
ஒரு அதிகாரியை ஆஜராக கூறி உத்தரவிட்டால், அனைத்து அதிகாரிகளும் நீதிமன்றத்தில் காத்துக்கிடப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், அனைத்து காவல் அதிகாரிகளும் மக்கள் வரிப்பணத்தில் தான் ஊதியம் பெறுகிறீர்கள் என குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து அரசு வழக்கறிஞர் வெங்கட்ரமணி, நீதிபதி கிருபாகரனிடம் மன்னிப்பு கோரினார்.