புழல், பூண்டி ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருவதால் கண்டேலறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க ஆந்திர மாநில அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடும் வறட்சி காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகின்றன.
இதனால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலும் நீர்மட்டம் குறைந்ததால் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக கண்டேலறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க ஆந்திர மாநில அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.