புதன், 22 மார்ச், 2017

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரசா மே அறிவிப்பு! March 21, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் வரும் 29ம் தேதி தொடங்கப்படும் என பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது குறித்துப் பிரிட்டனில் நடந்த கருத்து வாக்கெடுப்பில் வெளியேறுவதற்கு ஆதரவாக 52 விழுக்காட்டினரும், வெளியேறுவதை எதிர்த்து 48 விழுக்காட்டினரும் வாக்களித்திருந்தனர். 

இதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி வெளியேறும் ஐம்பதாவது சட்டப்பிரிவை வரும் 29ஆம் தேதி பிறப்பிக்க பிரிட்டன் பிரதமர் தெரசா மே முடிவு செய்துள்ளார்.

அன்றிலிருந்து வெளியேறும் நடவடிக்கை தொடங்க உள்ளது. அதன்பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய வணிகத் தொடர்புக்கான பேச்சைத் தொடங்க உள்ளதாகவும் தெரசா மே தெரிவித்துள்ளார்.

இதே போல் பிரிட்டனை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியமும் எடுத்து வருகிறது. எந்த நேரத்தில் பிரிட்டன் விலகினாலும் அதற்குத் ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது

Related Posts: