சென்னை மெரினாவில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத்தினர் 17 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இலங்கை இனப்படுகொலையில் உயிர்நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், கடந்த 7 ஆண்டுகளாக மே 17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மெரினாவில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, அப்பகுதியில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த ஆண்டும் திட்டமிட்டபடி, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப் போவதாக மே 17 இயக்கத்தினர் அறிவித்திருந்தனர். இதனால், மெரினா கடற்கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதுடன், உள்வட்ட சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கருப்புச்சட்டை அணிந்து வந்தவர்களை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது