சனி, 20 மே, 2017

இஸ்லாமிய நாட்டில் பெண்களே நடத்தும் தொலைக்காட்சி நிலையம்… ஆப்கானிஸ்தானில் ஒரு முன்னோடி முயற்சி…ஆப்கானிஸ்தானில் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இடையில் ஆப்கானிஸ்தான் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது. பெண்களை கட்டுப்பெட்டியாக வைத்திருக்க விரும்பும் தீவிரவாதிகளின் கண்ணெதிரே கடந்த மார்ச் மாதம் பெண்களே இயக்கும் ஐ.டி.கம்பெனி ஒன்று காபூலில் தொடங்கப்பட்டது. இப்போது, ஸான் டிவி அல்லது பெண்கள் டிவி என்ற பெயரில் முற்றிலும் பெண்களே இயக்கும் டி.வி. தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 40 தொலைக்காட்சிகள் இயங்குகின்றன. இவற்றுக்கு இடையே பெண்களே நடத்தும் இந்த டி.வி. நிச்சயமாக வெற்றிபெறும் என்று தொலைக்காட்சி தயாரிப்பாளரான காதிரா அஹமதி தெரிவித்தார். இவர்களுக்கு தொழில்நுட்ப அளவில் போதுமான பயிற்சியை கொடுப்பதற்காக 16 ஆண்கள் திரைக்குப் பின்னே பணியாற்றுகிறார்கள். பெண்களுக்கான இந்தத் தொலைக்காட்சியில் பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்கிறார்கள் இந்த புதுமை பெண்கள்.

ஆப்கானிஸ்தானில் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் தொடர் தாக்குதலுக்கு இடையில் ஆப்கானிஸ்தான் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது.
பெண்களை கட்டுப்பெட்டியாக வைத்திருக்க விரும்பும் தீவிரவாதிகளின் கண்ணெதிரே கடந்த மார்ச் மாதம் பெண்களே இயக்கும் ஐ.டி.கம்பெனி ஒன்று காபூலில் தொடங்கப்பட்டது.
இப்போது, ஸான் டிவி அல்லது பெண்கள் டிவி என்ற பெயரில் முற்றிலும் பெண்களே இயக்கும் டி.வி. தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 40 தொலைக்காட்சிகள் இயங்குகின்றன. இவற்றுக்கு இடையே பெண்களே நடத்தும் இந்த டி.வி. நிச்சயமாக வெற்றிபெறும் என்று தொலைக்காட்சி தயாரிப்பாளரான காதிரா அஹமதி தெரிவித்தார்.
இவர்களுக்கு தொழில்நுட்ப அளவில் போதுமான பயிற்சியை கொடுப்பதற்காக 16 ஆண்கள் திரைக்குப் பின்னே பணியாற்றுகிறார்கள்.
பெண்களுக்கான இந்தத் தொலைக்காட்சியில் பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்கிறார்கள் இந்த புதுமை பெண்கள்.

Related Posts: