வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறும் என்று நிரூபிக்க முடியுமா என்று தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சவால் விடுத்துள்ளார்.
டெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் நம்பகத்தன்மை கொண்டவை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும் என்றும் ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றும் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டை முன்வைத்தன. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
http://kaalaimalar.in/vote-machine-open-challenge-to-political-parties/