செவ்வாய், 23 மே, 2017

44 ஆண்டுகள் தமிழகத்தில் இருந்த ரஜினி தமிழன்னா…. 200 ஆண்டுகள் இந்தியாவில் இருந்த வெள்ளைக்காரன் இந்தியனா? ரஜினியை செருப்பால் அடித்த கேள்வி கேட்ட ராதாரவி


தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசியதை அடுத்து, அதுதான் தமிழகத்தின் பிரதான விவாத பொருளாக மாறியுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ராதாரவி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தபோது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ராதாரவி, நடிகர் ரஜினிகாந்த் மிகவும் நல்லவர் என்றும் அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
ஸ்டாலினை சிறந்த நிர்வாகி என ரஜினி பாராட்டியதற்கு மகிழ்ச்சி தெரிவித்த ராதாரவி, நல்லவர்கள், வல்லவர்கள் அரசியல் இருப்பதாக சில பேரை ரஜினி குறிப்பிட்டார்; பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.
44 ஆண்டுகள் தமிழகத்தில் இருந்ததால் நான் பச்சைத் தமிழன் என கூறுகிறார் ரஜினி. அப்படி பார்த்தால் 200 ஆண்டுகள் இந்தியாவில் இருந்த வெள்ளைக்காரன் என்ன இந்தியனா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் நான் ஒரு தெலுங்கர்தான் என தைரியமாகச் சொல்வேன்; என் தந்தை(எம்.ஆர்.ராதா) திராவிடர் கழகத்தில் இருந்து மக்களுக்காக பேசியவர், உழைத்தவர் என்றாலும் நாங்கள் தெலுங்கர்கள்தான் என கூறினார். ஆனால் ரஜினி ஏன் பயப்படுகிறார்? தன்னை ஒரு பச்சைத் தமிழன் என கூறுவதால்தானே நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள் என தெரிவித்தார்.
பொதுவாக சர்ச்சைக்குரிய வகையில் பேசும் ராதாரவி, ரஜினி விஷயத்தில் எப்போதுமே அவருக்கு ஆதரவாகத்தான் பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.