சனி, 13 மே, 2017

மூத்த குடிமக்களுக்காக அதிரடியாக 50% கட்டண சலுகை அறிவித்துள்ள ஏர் இந்தியா! May 13, 2017




ஒய்வுப் பெற்றப்பின் பல இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக, மூத்த குடிமக்களுக்கு 50% சலுகை அளித்துள்ளது ஏர் இந்தியா. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், ஏர் இந்திய உள்நாட்டு விமானங்களில் 50% தள்ளுபடியில் பயணிக்க இந்த சலுகை வழி வகுக்கிறது. 

மூத்த குடிமக்கள் இந்த சலுகை இருந்தது என்றாலும், அப்போது இந்த சலுகையைப் பெறுவதற்கான வயது வரம்பு, 63ஆக இருந்தது. அது தற்போது 60 வயதாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக  ஏர் இந்தியா நடைமுறைப்படுத்த உள்ளது. 

திருத்தம் செய்யப்பட்ட திட்டத்தின் படி, இந்தியாவில் நிரந்தரமாக வசிக்கும் எந்த ஒரு இந்தியருக்கும் இந்தச் சலுகை பொருந்தும். போட்டியாக உள்ள மற்ற நிறுவனங்களான ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஏற்கனவே 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பயண கட்டணத்தில் சலுகையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், வேறு எந்த நிறுவனமும் ஏர் இந்தியா அளவிற்கு 50% அளவிற்கு சலுகை அளிக்கவில்லை. மற்ற நிறுவனங்களான ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ மற்றும் ஜெட் ஆர்வேஸ் ஆகியவை 8 % மட்டுமே கட்டணத்தில் சலுகை வழங்கி வருகிறது. 

இந்தியாவைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட எந்த ஒரு முதியவரும் இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு புகைப்படத்துடன் கூடிய ஏதோ ஒரு அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும். வாக்காளர் அட்டை, ஒட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டை போதுமானது.