செவ்வாய், 16 மே, 2017

நாட்டிற்காக 7 முறை தங்கம் வென்ற வீராங்கனை, டீ கிளாஸ் கழுவும் அவலம்!


நாட்டிற்காக 7 முறை தங்கம் வென்ற வீராங்கனை, டீ கிளாஸ் கழுவும் அவலம்!


பளுதூக்குதல் போட்டியில் தேசிய அளவில் 7 முறை தங்கம் வென்ற ஷண்டோஷ் என்ற வீராங்கனை தற்போது டீ விற்றுக்கொண்டிருக்கிறார். 

இந்த நாட்டில் திரையில் தோன்றி நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் வாழ்க்கையில் போராடும் உண்மையான ஹீரோ, ஹீரோயின்களுக்கு கிடைப்பதில்லை. அதற்கு ஏற்றார் போல ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பளுத்தூக்குதல் வீராங்கனையின் வாழ்க்கை அமைந்துள்ளது. 

தேசிய அளவில் நடைப்பெற்ற பளுத்தூக்குதல் போட்டிகளில் 7 முறை தங்கம் பதக்கம் வென்றவர் ஷண்டோஷ். இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்காக தங்கம் வெல்ல வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டுவந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தால் தொடந்து எந்த போட்டிகளிலும் பங்கு பெற முடியாமல் போனது. 

இதனால் தற்போது அவருடைய தந்தையின் டீ கடையில் டீ விற்றும் டீ கிளாசுகளை கழுவும் வேலையையும் செய்துவருகிறார். இதுகுறித்து ஷண்டோஷ் கூறும்போது, அவருடைய சாதனைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் உதவ வேண்டும் என்றும், ஏழ்மை நிலையில் இருந்து விடுபட அரசு வேலை வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கிறார் இந்த வீராங்கன! 

Related Posts: