செவ்வாய், 16 மே, 2017

அனைவருக்குமான பொது சட்டமாக

திருவாருர் மாவட்டம் நீடாமங்கலத்தில் குடும்ப தகராறு காரணமாக கெளரி (25) என்கிற பெண் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்துள்ளார்.
அவர் இறப்பதற்கு முன் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ காட்சி காண்போரின் உள்ளங்களை பிழிய செய்துள்ளது.
கௌரியின் தற்கொலைக்கு அடிப்படை காரணம் இந்து திருமண சட்டமே...
இதற்கு காரணம் உடனடியாக விவகாரத்து தராமல் கோர்ட் கேஸ் என்று இழுத்து அடிக்கும் இந்து திருமண சட்டமே கெளரியின் உயிரை பறித்துள்ளது.
உத்திர பிரேதேசம் மாநிலத்தில் கணவன் வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததால் ஒரே நாளில் கணவனை விவகரத்து செய்வதாக அறிவித்துள்ளார் ஒரு இஸ்லாமிய பெண்மணி
இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பொறுத்தவரை ஒரு பெண்ணுக்கு தன்னுடைய கணவருடன் வாழ விருப்பம் இல்லையென்றால் ஒரே நாளில் தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெரும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.
விவாகரத்திற்கான காரணத்தை கூட அந்த பெண் சொல்லத்தேவையில்லை.
இந்த உலகத்தில் இஸ்லாம் மட்டுமே இந்த உரிமையை பெண்களுக்கு வழங்கியுள்ளது.
ஆண்கள் மனைவியை விவாகரத்து செய்வதாக இருந்தால் கூட மூன்று விதமான நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் கிடையாது.
ஒரே நாளில் காரணம் கூட சொல்லாமல் கணவரிடமிருந்து விவாகரத்து பெரும் உரிமை இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கெளரி மட்டும் முஸ்லிமான பெண்ணாக இருந்திருந்தால் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டிருக்க மாட்டார். நீதிமன்றம் செல்லாமல், வக்கீலுக்கு பணம் செலவழிக்காமல், காலங்கள் கடத்தப்படாமல், ஊர் ஜமாஅத் தலைவரிடம் சொல்லி ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல், ஒரே நாளில் விவாகரத்து பெற்றிருப்பார்.
மறுமணமும் செய்யவும் இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. குழந்தையும் அநாதையாகியிருக்காது.
இஸ்லாமிய திருமண சட்டமே
இந்து மக்களுக்கும் பாதுகாப்பான சட்டம்
என்பதை கவனத்தில் கொண்டு
காவி பாஜக தீவிரவாத அரசு இஸ்லாமிய திருமண சட்டத்தை அனைவருக்குமான பொது சட்டமாக
அறிவிக்க வேண்டும்...
Image may contain: 3 people, text

Related Posts: