டேராடூன்:’ஹரித்துவாரில் ஓடும் கங்கை நதி, குளிப்பதற்கு கூட லாயக்கில்லாத அளவு மாசடைந்து உள்ளது’ என, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந் திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தேவப்பிரயாகையில் உற்பத் தியாகும் கங்கை நதி, ஹரித்துவார் உள்ளிட்ட
முக்கிய நகரங்கள் வழியாக ஓடுகிறது.கங்கையில் குளித்தால்பாவங்கள் அகலும் என்பதால், லட்சக் கணக்கானோர், கங்கையில்புனித நீராடுகின்றனர்.
ஹரித்துவார் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித் துள்ளது. முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்கள் அமைக்கப்படாததால், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு, கங்கையில் கலக்கி றது. இதனால், கங்கைநதி மாசடைந்துஉள்ளது.
இந்நிலையில், தகவல்அறியும் உரிமைசட்டத்தின் கீழ், கங்கை நதி நீரின் மாசு தன்மை குறித்து கேட் கப்பட்டகேள்விக்கு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம்அளித்துள்ள பதில்:
உத்தரகண்டில், கங்கோத்ரி முதல், ஹரித்துவார் வரை, 11 இடங்களில் கங்கை நதிநீர் மாதிரிகள் ஆய் வுக்காக எடுக்கப்பட்டன. தண்ணீரின் வெப்ப நிலை,
ஆக்சிஜனின் அளவு மற்றும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றை வைத்து, சோதனை நடத்தப் பட்டது.
இதில், கங்கை நதிநீர், குடிப்பதற்கும், குளிப்ப தற்கும் பாதுகாப் பற்றது என்பது தெரிய வந்துள் ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
http://kaalaimalar.in/gangai-river/