"முதல் இந்திய சுதந்திரப் போர்" என்ற சிப்பாய் புரட்சிக்கு முன்பாகவே ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்தவர்கள் முஸ்லிம் மாவீரர்களே. அதிலும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் தியாகம் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று .
2 லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆவார்கள். அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மைகள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?